வவுனியாவில் கிராம சேவகர்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வவுனியா வடக்கு புளியங்குளம் வடக்கு கிராம சேவகருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவகருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் புளியங் குளம் பிரதேச வைத்திய சாலையில் இன்றைய தினம் அன்டியன் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.


இதன் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் அங்கு பணிபுரியும் சில உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், கனகராயன் குளம் வடக்கு கிராம சேகவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.