வவுனியாவில் மரணமடைந்த இருவருக்கு கொரோனா தொற்று..!

வவுனியாவில் மரணமடைந்த இருவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவர் திடீரென உடல் சுகவீனமுற்ற நிலையில் வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, புளியங்குளம் வைத்திய சாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நபரொருவர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மரணமடைந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் கொரோனா காரணமாக இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.