ஹம்பாந்தோட்டையில் நில அதிர்வு; புவிசரிதவியல் திணைக்களம் தெரிவிப்பு..!

ஹம்பாந்தோட்டையில் 2 ரிச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இன்று (24) இரவு 9.19 அளவில் குறித்த நில அதிர்வு ஹம்பாந்தோட்டை நகரம் மற்றும் அதணை அண்மித்த பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.