வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் பொருந்தாது – அமைச்சர்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதர முடியும் என அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.


அதற்கமைய, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.