செப்டம்பர் 15 க்கு பின்னர் தனி நபர்களுக்கான டிஜிட்டல் தடுப்பூசி அட்டைகள்..!

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட தனி நபர்களுக்கான டிஜிட்டல் அட்டை வழங்கும் செயற்பாடுகள் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



செப்டெம்பர் முதல் வாரத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75% மானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் அடிப்படையில் டிஜிட்டல் தடுப்பூசி அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 161,650 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இதுவரை (நேற்றிரவு) 5,949,431 இலங்கையர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன.