கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை சுகாதாரத் தரப்பினரிடம் ஒப்படையுங்கள்..!

நாட்டில் தற்போது உருவாகியுள்ள நான்காவது கொவிட் அலையை முகாமைத்துவம் செய்வதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது.

முடக்கத்தின் போது தனிநபர் இடைவெளியை 90 வீதம் பேணுவதால் மாத்திரமே அதன் பயனைப் பெற வேண்டும். ஆனால் தற்போது 90 வீத தனிநபர் இடைவெளி பேணப்படவில்லை.


எனவே தடுப்பூசி வழங்கும் பணிகளை முழுமையாக சுகாதார தரப்பினரிடம் ஒப்படைத்து விட்டு , போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் அதில் முழு அவதானத்தையும் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.


மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.