செல்பி வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் ரோஹண..!

கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு தனியார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தன.


பொலிஸ் தலைமையகமும் இவற்றை மறுத்து செய்தி வெளியிட்டிருந்தது. இந் நிலையில் அஜித் ரோஹண, தான் நலத்துடன் இருப்பதாக செல்பி படமொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.


இதனையடுத்து அவரின் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.