நாடு கோவிட் தொற்று நோயின் மோசமான நிலையை அடைந்துள்ளது ..!

கோவிட் தொற்று நோயின் மிக மோசமான மற்றும் உயர்ந்த நிலையை நாடு எட்டியுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.


மருத்துவர் மேலும் தெரிவிக்கையில்,

சுகாதார ஊழியர்கள் மேலும் மேலும் தொடர்ச்சியாக வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

“எங்கள் சுகாதாரத் திறன் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மருத்துவ மனைகளில் தீவிர சிகிச்சை வசதிகள் அவற்றின் திறனைத் தாண்டிய நிலையை எட்டியுள்ளன”.


எங்கள் ஊழியர்களில் வைரஸ் பரவியுள்ளதால் நாங்கள் தற்போது கடுமையான மனித வளப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம், என அவர் தெரிவித்தார்.