கறுப்புச் சந்தையில் ஒரு கிலோகிராம் சீனி ரூ200ஆக உயர்வு..!

தற்போது சந்தையில் சீனி பற்றாக்குறைவாக உள்ளதுடன் ஒரு கிலோகிராம் சீனியின் கறுப்பு சந்தை விலை ரூ200 க்கு மேல் காணப்படுகின்றது என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீனி க்கு அரசு நிர்ணயிக்கும் அதிகபட்ச விலைகள் நடைமுறைப் படுத்தப்படவில்லை??

இதேவேளை, ஜூலை மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கடந்த 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NPI) படி, இது ஜூன் மாதத்தில் 2.9% லிருந்து ஜூலை இறுதியில் 3.2% ஆக சற்று உயர்ந்துள்ளது.

ஆனால் சந்தையில் அனைத்து பொருட்களின் விலைகளும் மிக உயர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.