ஊரடங்கு மேலும் நீடிப்பு; வெளியாகிய புதிய அறிவிப்பு..!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


இன்று ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், குறித்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.