அதிபர்-ஆசிரியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி புனைக் கதை எழுத வேண்டாம் – ஜோசப் ஸ்ராலின்

அதிபர்-ஆசிரியர் போராட்டத்தில் பங்கேற்ற 400 ஆசிரியர்கள் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அவர்களில் 25 பேர் இறந்து விட்டதாகவும் சிலுமின என்ற சிங்கள செய்தித்தாள் வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் பொது கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவரான வசந்த ஹந்தபங்கொட இதனை சிலுமின பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார், சுபாஷினி ஜயரத்ன என்ற ஊடகவியலாளர் சிலுமின செய்தித்தாளுக்கு இன்று (29) தொடர்புடைய செய்தியை எழுதியுள்ளார்.


ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் சிறப்பு மருத்துவர்களின் வேண்டுகோளின் பேரில் வாபஸ் பெறப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது என்று ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.


இத்தகைய சூழ்நிலையில், ஒரு அரசு சார்பு தொழிற் சங்கத்தில் ஒரு பெண்ணை முன்நிறுத்துவதும், ஒரு தேசிய செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஆதாரமற்ற கதையை வெளியிடுவதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.