நாட்டில் கொரோனா தொற்றால் நான்காவது தாதி உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு தாதி நேற்று (27) உயிரிழந்துள்ளார். அதன்படி, கொரோனா தொற்றால் உயிரிழந்த நான்காவது தாதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.

மினுவங்கொடை ஆதார மருத்துவமனையில் 2ஆவது விடுதியின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்த திருமதி அமரசிங்க என்ற தாதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.


இந்த மருத்துவமனை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ மனையாக மாற்றப் பட்டதிலிருந்து அங்கு கடமையாற்றி வரும் இவர், நோயாளர்களிடம் மிகவும் மதிப்பை பெற்ற ஒரு தாதியாக விளங்கி வந்ததாக மருத்துவமனையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இவரது இறுதி கிரியை நேற்று (மாலை) தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைவாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.