அதிபர்-ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி..!

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்சை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட சிபாரிசுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இதேவேளை இந்த நடைமுறையானது 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் இருந்து பல கட்டங்களாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று திங்கள் கூடிய அமைச்சரவையில் குறித்த இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.