அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் அரச சேவைக்கான சகல ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த முடிவு..!

அரசாங்கம் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக அரச செலவுகளை கட்டுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பூசி, சுகாதாரத் துறையில் கூடுதல் செலவுகள் மற்றும் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதன் காரணமாக இந்த ஆண்டிற்கான தொடர்ச்சியான செலவு, மதிப்பீடு செய்த செலவை விட அதிகமாக இருக்கலாம் என்று அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் தொடங்கப்படாத கட்டிடங்களின் சீரமைப்பு மற்றும் அரச சேவைக்கான அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.