மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பு..!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கட்டணங்களை ஒன்லைன் முறையின் கீழ் செலுத்துமாறு பொது மக்களை கேட்டுள்ளது.

தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்து கொள்ள முடியும் என்று சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.


தற்போதைய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவையாக நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அவசர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமது சபையின் பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக அந்த சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.