அரசாங்கத்தை தடுமாற வைத்த ஆசிரியர் அதிபர்-சங்கங்களின் அதிரடி அறிவிப்பு..!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க 5000 ரூபா வழங்க முன்வந்த நிலையில் தமக்கு 5000 ரூபா கொடுப்பனவு வேண்டாம் என்றும் அந்தப் பணத்தை கொவிட் நிதிக்கு எடுத்துக் கொள்ளுமாறும் ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளது.


அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு காரணமாக அரசாங்கம் எதிர்வரும் செப்டம்பர் , ஒக்டோபர் மாதங்களுக்கு 5000 ரூபா வழங்க தீர்மானித்துள்ளது. இந்நிலையில் இதற்கு செலவிடப்படவுள்ள 2360 மில்லியன் ரூபாவை கொரோனா தடுப்பு நிதியத்துக்குப் பயன்படுத்துமாறு ஆசிரிய சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.


5000 ரூபா பணத்திற்காக இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது. நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை ஒரே தடவையில் வழங்க வேண்டும் என்றும் 24 வருட காலமாக மறுக்கப்பட்டு வரும் உரிமையை நாங்கள் கேட்கிறோம் என அமஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் இந்த அரசாங்கம் எங்களுக்கு வழங்கத் தீர்மானித்துள்ள கொடுப்பனவுகளை நான்கு பிரிவுகளாக பிரித்து வழங்கத் தீர்மானித்துள்ளனர். எங்களின் ஆர்ப்பாட்டத்தை 5000 ரூபாவுக்காக விட்டுக் கொடுக்க முடியாது என்றும் இன்றும் நாளையும் கலந்துரையாடி இந்தப் போராட்டத்தை புதிய வடிவில் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை தொடர்ச்சியான பெரும் போராட்டத்தின் பின்னர் அரசாங்கம், அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க 5000 ரூபா வழங்க முன்வந்த நிலையில் கொடுப்பனவு வேண்டாம் என ஆசிரியர்கள் சங்கம் கூறியுள்ளமை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.