மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி அவசியமா? வைத்திய நிபுணர் வெளியிட்ட தகவல்..!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவ மனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில், கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளதால் கொரோனா தொற்றாளர்களும் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன.

வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் 52,361 பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 37,448 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் 14,233 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ள நிலையில் ஒரு சில வீடுகளில் தொற்று ஏற்பட்டு அவை மாணவர்களினூடாகவோ அல்லது அதிபர், ஆசிரியர் ஊடாகவோ கொரோனா பரவுமாயின் அவை பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொத்தணியாக மாறக் கூடும், எனவே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியமாகின்றது.


உதாரணமாக சுகாதார நடைமுறைகளைப் கடுமையாகப் பின்பற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் தரப்பினரே கொரோனா தொற்றால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு பலியாகியுள்ள நிலையிலும் இதுவரை ஒருசில மாணவர்களும் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். புதிய வைரஸ் திரிபுகள் உருவாகி வரும் நிலையில் பாடசாலைகளை உடன் மீள ஆரம்பித்தல் சாத்தியமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.