அதிபர்,ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்ட விநயமான வேண்டுகோள் – மகிந்த அமரவீர

சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மீண்டும் இணையவழி கற்பித்தல் செயற்பாட்டுக்கு திரும்புமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அரசாங்கத்தின் வருமானம் பெருவீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையிலும் சம்பள பிரச்சினை குறித்து அமைச்சரவை நியாயமான தீர்வை முன் வைத்துள்ளதால் சிறுவர்களின் சார்பில் ஆசிரியர்களும் அதிபர்களும் தங்கள் கடமைகளை மீள ஆரம்பிக்கவேண்டும்.


தொழிற் சங்கங்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை முன்னெடுத்தாலும் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள கடினமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணையவழி கற்கைக்கு திரும்புவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடர்வது என அதிபர் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் தீர்மானித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.