சிறிலங்காவில் வலைத் தளங்களை கட்டுப்படுத்த அறிமுகமாகும் மற்றுமோர் புதிய சட்டம்..!

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களை மையப் படுத்திய புதிய சட்டம் ஒன்று விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

”அமைச்சரிடம் கேளுங்கள்” என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இனவாதத்தை பரப்புவது உள்ளிட்ட ஏனையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் மற்றும் செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்தும் வகையில் இச்சட்டம் அமையும்.


சிங்கபூரில் அமுலில் உள்ள சட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஒரு வரைபு உருவாக்கப் பட்டுள்ளதுடன், இது விரைவில் சட்டமாக்கப்படும் என்றார்.