பைஸர் தடுப்பூசி இல்லை; ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற மக்கள்..!

கொழும்பு மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசி இல்லாத பட்சத்தில் ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் திரும்புவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

தாம் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோர் 30 வீதமாக உள்ளர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மேலும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் பொது இடங்களுக்கு வருகை தருபவர்கள் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது அவசியமாகுமென அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்திருந்த நிலையில் நாட்டில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமை பெறாத காரணத்தினால் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.


இதேவேளை பைசர் தடுப்பூசி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்க அரசாங்கமே தனக்கு அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாகடர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.