நாட்டில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை; 4.5% பொருளாதார வளர்ச்சி ஏற்படும்..!

கொவிட் 19 வைரசு தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர் கொண்டுள்ளது.

இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.


பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,

போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் களஞ்சியங்களில் காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள்.


இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.