மாணவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம்; போட்டால் இந்த ஊசிகளை போடவும் (வீடியோ) – பேராசிரியர்

நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் இதுவரை குறையாத நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான செயற்பாடு ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் பாடசாலைகளை திறக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


எனினும் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்து கொண்ட லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, நாட்டில் தற்போது பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும் இது குறித்து ஆராயும் படியும் அவர் வலியுறுத்தினார்.


பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபாம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.