சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு உடன் தீர்வை பெற்றுக் கொடுக்க சுற்றுநிரூபம்..!

மேல் நீதிமன்றங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்று நிரூபம், சகல மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தாமதமடைவது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்குவது மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்பார்ப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.