குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை காரியாலயங்களின் சேவைகள் நாளை (15) முதல் வழமைப்போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.


மேலும் கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதார சேவைகள் என்பன தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.