தொடர்ச்சியாக பதவி விலகும் உயரதிகாரிகள்; மேலும் ஓர் அரச நிறுவனத்தின் தலைவரும் இராஜினாமா..!

இலங்கையில் தொடர்ச்சியாக உயரதிகாரிகள் பதவி விலகி வரும் நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கலாநிதி J.D. மான்னப்பெரும, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை அவர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகின்றது.


தனிப்பட்ட காரணங்களை சுட்டிக் காட்டி அவர் பதவி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அண்மைய நாட்களில் இராஜினாமா செய்த அரச நிறுவனங்களின் இரண்டாவது தலைவர் இவர் ஆவார்.


கடந்த வாரம், தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் ஜெனரல் இஷினி விக்ரமசிங்க, தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தனது பதவியை இராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.