பதின்ம வயது சிறுமி குழந்தையை பிரசவித்த அவலம்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 29 வயதான திருமணமான நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் சிறுமி மேற்பட்ட சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ள நிலையில், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.


இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ள நிலையில், தான் கருவுற்றிருப்பதை வீட்டாருக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டிலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ள நிலையில், கடுமையான இரத்தப் போக்கு காரணமாக கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கலகெதரவைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் பிறந்த குழந்தையின் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபர் இன்று கலகெதர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பூஜாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போதய கொரோனா நெருக்கடியான காலத்திலும் சிறுவர், சிறுமிகளுக்கு வீடுகளில் பாதுகாப்பு அற்ற நிலை காணப்படுகின்றமை பெற்றோரின் அசமந்தத்தையே காட்டுகின்றது.


இத்தகைய சம்பவங்கள் சிறுவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்கு உட்படுத்துவதாக அமைந்துள்ளது.