உக்கிரமடையும் சம்பள முரண்பாட்டு பிரச்சினை; இதுவரை உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள்..!

எதிர்வரும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2,922 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற 6,589 விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிபர்கள் மூலம் கல்வி அமைச்சிற்கு அனுப்ப வேண்டும்.


இந்நிலையில் , தற்போது சம்பள முரண்பாடுகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதன்மை தொழிற் சங்கங்கள் உயர்தர மாணவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிக்கப் போவதில்லை என சமீபத்தில் முடிவு செய்தன.


அதன்படி, கல்வி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


இதேவேளை குறித்த இரண்டு பரீட்சைகளிற்குமான விண்ணப்ப முடிவு திகதி இன்று முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.