அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் இராஜினாமா நாடகம் அம்பலம்..!

சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பதவியிலிருந்து விலகிய லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் அவரது இராஜினாமா கடிதத்தில் தெளிவாகக் கூறப் பட்டிருப்பதாகவும், குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற் துறை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை எனவும் கூறப்படுகின்றது.


எனினும் லொஹான் ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சிறைச் சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்று பதவி விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்களின் போதும் கண்துடைப்பு நாடகங்கள் அரங்கேற்றப் பட்டமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.