பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் மஹிந்த..!

முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த சமரசிஙக தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.


வெற்றிடமாகியுள்ள அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான தூதவர் பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.


அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக 2020 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ரவிநாத் ஆரியசிங்க ஒன்பது மாதங்களுக்கு பின்னர் கடந்த வாரம் சேவையிலிருந்து ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.