பல்கலைக் கழகங்கள் விரைவில் திறக்கப்படும்; இன்று வெளியாகிய புதிய அறிவிப்பு..!

கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் பல்கலைக் கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சகல பல்கலைக் கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் பல்கலைக் கழக மாணவர்களும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.


தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைக் கழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் அனைத்துப் பல்கலைக் கழகங்களை திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.


பல்கலைக் கழகங்கள் தற்போது மூடப்பட்டிருந்தாலும் சகல கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் செயற்பாடுகள் காணொளி ஊடாக முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.