துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் பலி; மூவர் கைது; பிரதான சந்தேகநபர் தலைமறைவு..!

ஹம்பாந்தோட்டையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையின் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.


குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு பலியானதாக மேலும் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றது என இதுவரையில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.


மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.