முதன் முறையாக அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்..!

முதன் முறையாக அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்

1. இலங்கையில் சட்ட ரீதியாக வசிக்கும் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

2. 16 வயது நிரம்பியிருத்தல் வேண்டும்.

3. முதன்முறை அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

 நிரப்பப்பட்ட ஆட்பதிவுத் திணைக்களத்தின், வீ 01 இலக்க விண்ணப்பப்படிவம் (வெள்ளை நிறம்)

 பிறப்புச் சான்றிதழ் அல்லது அண்ணளவான வயது பற்றிய சான்றிதழ் (உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப் பிரதியுடன்)

 துறவறம் பூண்ட மதகுருவின் பெயராயின் பௌத்த அலுவல்கள் திணைக்களம் வழங்கிய அல்லது உபசம்பத சான்றிதழ் அத்துடன் உறுதிப் படுத்தப்பட்ட நிழற்படப் பிரதி.


 கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவ சமயகுருமார் தமது சமய அமைப்புக்களின் பிரதம குருமார்களிடமிருந்தும், இந்து மற்றும் இஸ்லாமிய மதகுருமார் இந்து மற்றும் இஸ்லாமிய அலுவல்கள் திணைக்களங்களினால் இவர்கள் சமய குருமார்கள் என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட கடிதங்கள்.

 4 வர்ண புகைப்படங்கள் (13/8 x 7/8 அங்|)

 முத்திரைக் கட்டணம்
• 16 தொடக்கம் 17 வயதுவரையான விண்ணப்பதாரிகட்கு 3 ரூபா முத்திரை
• 17 வயதுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகட்கு 13 ரூபா முத்திரை.


 திருமணமான பெண்கள் தமது கணவரின் பெயரை தமது பெயருடன் சேர்க்கவிரும்பின் விவாகச் சான்றிதழின் மூலப்பிரதியும் உறுதிப்படுத்தப்பட்ட நிழற்படப்பிரதியும்.

 தொழில் பற்றி குறிப்பிட வேண்டுமாயின் தொழில் பற்றிய சான்றிதழ் (3மாதத்துக்குள் பெறப்பட்ட) தொழில்சார் தகைமைகள் பெற்றவர்கள் அத்தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
உதா :- மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி போன்ற தொழிற்றகைமை தொடர்பில் பட்டதாரிச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


 விலாசம் எழுதப்பட்ட 30 ரூபா பெறுமதியான முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை (அடையாள அட்டை தயாரிக்கப்பட்டதும் சொந்த விலாசத்துக்கு அதனை தபாலில் அனுப்புவதற்காக).