உயர்தரப் பரீட்சைக்கு முன் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை தொடர்பில் கல்வி அமைச்சு கவனம்..!

உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க கேட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சைக்கு முன் பாடத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை தொடர்பில் தீர்வைக் காண்பதற்குப் பரீட்சைத் திணைக்கள ஆணையாளருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.


உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.