அதிபர்களின் தொழிற் சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதா? வெளியாகிய அறிவிப்பு..!

தாங்கள் முன்னெடுத்துவரும் தொழிற் சங்க நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக சில அதிபர் சங்கங்கள் தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது என இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதிபர், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டாக முன்னெடுத்துள்ள இந்த தொழிற் சங்க நடவடிக்கைகளை சீர்குலைக்க சிலர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை மாத்திரம் நாளைய தினம் அனுப்பிவைப்பதற்கு, தற்போது தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


எவ்வாறாயினும் தரம் ஐந்துபுலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.