உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொவிட் ஊசி இதுதான்..!

இந்த வருடம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார்.


பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து கல்வி அமைச்சு ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை போடுமாறு ஜனாதிபதி அண்மையில் அறிவுறுத்தியதாகவும் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.


கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.