கபொத உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா? மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை..!

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக மாணவர்களுக்கு சீரான கல்வி கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்நிலையில் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


தொடர்ந்தும் அவர்கள் தெரிவிக்கையில்,

சுமார் ஒன்றரை வருடங்களாக பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தற்போது வேதன முரண்பாடு உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை போன்ற காரணங்களுக்காகவே பரீட்சை ஒத்தி வைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.