சினோபாம் தடுப்பூசியைப் பெற இளைஞர்கள் ஆர்வம் இல்லை; அதிர்ச்சியில் அதிகாரிகள்

இலங்கையில் சினோபாம் தடுப்பூசியைப் பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டாமல் இருக்க பல முக்கிய காரணங்களை சுகாதார அதிகாரிகள் முன் வைக்கின்றனர்.

இது தொடர்பில் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில்,

நாட்டில் தற்போது 20-30 வயதுக்குட்பட்டவர்களில் 25% க்கும் குறைவான இளைஞர்களே தடுப்பூசி பெற்றுள்ளனர்.


மற்ற தடுப்பூசிகளை விட அதிக செயல்திறன் கொண்டதாக இவர்கள் கருதும் ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை பெற விரும்புவதே முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.

இரண்டாவதாக, கல்வி அல்லது வேலை வாய்ப்பிற்காக வெளி நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசிகளை எதிர்பார்ப்பதும் காரணமாகும். இளைஞர்கள் சினோபாம் கோவிட் தடுப்பூசியைப் பெறுவதைத் தவிர்க்கிறார்கள்.


தற்போது பல நாடுகள் பயணிகளுக்கான தடுப்பூசி கொள்கையை தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ள உபுல் ரோஹன, தற்போதுள்ள தடுப்பூசியை பெறுமாறு வலியுறுத்தினார்.

மற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு முன்பு, முதலில் வைரஸிலிருந்து உயிரைப் பாதுகாப்பது அவசியம் என்று அவர் எச்சரித்தார்.


இதற்கிடையில், 20 – 29 வயதுக்கு உட்பட்டவர்களிடையே கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாதது குறித்து மற்ற சுகாதார அதிகாரிகள் தீவிர கவலைகளை எழுப்பியுள்ளனர்.

எனவே குறித்த விடயத்தை ஏற்று உலக சந்தையில் அண்ணளவாக சம விலையில் விற்பனை செய்யப்படும் ஏனைய வகை ஊசிகளை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ நாட்டின் எதிர்காலச் சந்ததிகளாகிய இளைஞர்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேவேளை ஊசி கட்டாயம் போட வேண்டும் என்பது சட்டமாக்கப்படும் படசத்தில் கூட எந்த வகையான ஊசியை தெரிவு செய்வது என்பது தனிப்பட்ட நபர்களின் உரிமையே ஆகும். நாட்டில் பலவகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை மட்டும்தான் போட வேண்டும் என தனிநபர் உரிமையை எச் சட்டம் கொண்டும் தடுக்க முடியாது.

எனினும் தடுப்பூசி போடுவது ஆரோக்கியமானது என்பதுடன் சகல கொரோனா தடுப்பூசிகளும் கொரோனா மரணத்திலிருந்து ஊசி போடாதவர்களை விட ஓரளவு பாதுகாக்கின்றன. நாட்டில் கட்டாயம் ஊசி போட வேண்டும் என்ற சட்டம் எவையும் இதுவரை அமுல்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.