பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

கடந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள், தங்களது பரீட்சை இலக்கத்தை மறந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.


அத்தகைய மாணவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி தங்களது பரீட்சை பெறுபேறுகளை பார்க்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித கூறியுள்ளார்.


இதேவேளை பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 011 2 784 537, 011 2 784 208, 011 3 140 314 ஆகிய இலக்கங்களுக்கு அல்லது 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி மேலதிக விடயங்களை தெரிந்து கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.