செயன்முறை பெறுபேறு இன்றி உயர் தரம் கற்க 236,053 பேர் தகுதி; ஏனையோரின் நிலை என்ன?

2020 கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்றி 236,053 பேர் உயர் தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அழகியல் பாடநெறிக்கான செயன்முறைப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப் படாவிட்டாலும் பாடசாலை மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் உயர்தரம் கற்பதற்காக 75.1 சதவீத மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். 231,458 மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர்.


இந்த நிலையில் முழுமையான விண்ணப்பதாரிகளுடன் அவதானிக்கையில் 236,053 பேர் அதாவது 73.6 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அழகியல் பாடநெறிகளுக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும்.நூற்றுக்கு நூறு வீதம் பெறுபேற்றை வழங்க முடியுமானால் அது மிகவும் முக்கியமானதாகும்.


காரணங்கள் இல்லாது எவருக்கும் பெறுபேற்றுச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐந்து பாடங்கள் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் உயர் தரத்தில் சங்கீத, நடன பாடங்களை கற்பதற்கு தெரிவு செய்யும் மாணவர்களின் நிலை என்ன? இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக மாணவர் இடை விலகல் அதிகரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


தண்ணீருடன் கோபித்துக் கொண்டு XXX கழுவாமல் இருந்தால் பாதிப்பு எமக்கே என்ற பழமொழிக்கு வலுச் சேர்க்கும் வகையில் அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்டுக் கொண்டு அரசு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியுள்ளது.

தற்போதய கொரோனா முடக்க நிலையில் அவசர அவசரமாக O/L பெறுபேற்றை வெளியிட்டதன் அவசியம் என்ன? கல்வி அனைவருக்கும் சமம் என்பவர்கள் இது தொடர்பிலும் சிந்திப்பார்களா?