இலங்கையிலிருந்து பலர் வெளியேற முயற்சியா? வெளியாகிய அறிவிப்பு..!

இலங்கையில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 56,406 புதிய கடவுச் சீட்டுக்களை வழங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில், 27,326 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன, 28,903 புதிய கடவுச்சீட்டுகள் அனைத்து நாடுகளுக்கும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், ஓகஸ்ட் 31 வரை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 161,820 புதிய பாஸ்போர்ட்களை வழங்கியுள்ளது.

2020 உடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது, 2020 இல் ஆண்டு முழுவதும் மொத்தம் 204,081 புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையில்லாப் பிரச்சினை, இறக்குமதி தடைகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அரசியல் ஸ்திரத் தன்மையற்ற நிலை, தனிமனித சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் அதீத இராணுவத் தலையீடுகள் போன்ற காரணிகள் குறித்த விடயத்தில் செல்வாக்குச் செலுத்தலாம் என நம்பப்படுகின்றது.