கொரோனா தடுப்பூசி கட்டாயமா? சுகாதார அமைச்சர் வழங்கிய பதில்..!

கொரோனா நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ள போதிலும், சிலர் அதனை புறக்கணித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கண்டி தேசிய வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தை திறக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றமை தொடர்பில் சட்ட வரைவொன்று தயாரிப்பதற்கான தேவை ஏற்பட்டால் அது தொடர்பில் சுகாதார தரப்புக்களுடன் கலந்துரையாடி அதனை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கண்டி தேசிய வைத்திய சாலையில் 100 சாதாரண சிகிச்சை கட்டில்களும், 10 அவசர சிகிச்சை கட்டில்களும் அடங்களாக இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


தடுப்பூசி நடைமுறை இதுவரை கட்டாயமாக்கப்படாத போதும் கொவிட் எனும் ஆட்கொல்லி நோயிடமிருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் ஓரளவேனும் பாதுகாக்க தடுப்பூசி அவசியமாகின்றது.