சுகாதார ஊழியர்களின் கொவிட் கொடுப்பனவு வெட்டு; தொழிற் சங்க நடவடிக்கையில் தாதியர் சங்கம்

கொவிட் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வெட்டப் பட்டமைக்கு நியாயமான தீர்வு வழங்கக் கோரி இன்று (27) தொழிற் சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரச தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவிற்கு எழுத்து பூர்வமாக அறிவித்துள்ளது.


அரச தாதியர் சங்கம் சுகாதார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில், தாதியர்கள் திங்கள் (27) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தங்கள் கடமைகளில் இருந்து விலகியிருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய கூறுகையில்,


கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களுக்கு முறையான வசதிகளை வழங்காதது, ரூ 7,500 கொடுப்பனவை செலுத்தாதது உட்பட எட்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.