ஊரடங்கு நீக்கப்பட்டதும் ஒக்டோபர் 15 முதல் பாடசாலைகள் ஆரம்பம்..!

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் தென் மாகாணத்தில் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இத்தகவலை தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். அதற்கான பூர்வாங்க நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிபர்-ஆசிரியர்களின் பணிப் புறக்கணிப்பு உணர்வு பூர்வமாக தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.