தும்புத் தடியால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு – தந்தை கைது

தும்புத் தடியால் தாக்கப்பட்டமையால் மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்திய சாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேகநபர் காலி பிரதான நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


காலி – மஹமோதர பகுதியில் 16 வயதான குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் அவர் தாக்கப்பட்டுள்ளார்.


இதன் போது மயக்கமடைந்த சிறுவன் கராப்பிட்டிய வைத்திய சாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.