நெதர்லாந்திலிருந்து மேலும் 40 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன..!

பைசர் தடுப்பூசியின் மேலும் நான்கு மில்லியன் டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளது. இலங்கையில் ஒரே தடவையில் அதிகப்படியாக இறக்குமதி செய்யப்பட்ட பைசர் தடுப்பூசிகள் அளவுகள் இவையாகும்.


தடுப்பூசி அளவுகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


தற்சமயம் இந்த தடுப்பூசிகளின் அளவுகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய சாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.