வவுனியா மாவட்டத்தில் முதற் கட்டமாக 114 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை..!

வவுனியா மாவட்டத்தில் முதற் கட்டமாக 114 பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொவிட் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது வவுனியா மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட 114 பாடசாலைகள் காணப்படுகின்றன. அதனை திறப்பதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுன்ளது. இந்த வேலைகளை முன்னெடுக்க பொலிஸ் மற்றும் பாதுகாப்பு துறையினரின் உதவிகளையும் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சுகாதாரப் பிரிவினர், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.