ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்..!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களில் இருந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தங்களது உத்தியோகபூர்வ ஆவணங்கள் அல்லது தொழில் அடையாள அட்டையை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவ, மாணவியரும் தங்களது பரீட்சை நுழைவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் களுத்துறை மாவட்டத்தின் சில கிராமங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் தனிமைபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.