காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு..!

01.04.2021 முதல் 30.09.2021 வரையான காலத்தில் காலாவதியாகும் அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 12 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29.09.2021 ஆம் திகதிய 17/2247ம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அமைவாக இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த வர்த்தமானி மூலம் 2021.10.01 இலிருந்து 2022.03.31 வரையான காலப் பகுதிக்குள் காலாவதியாகின்ற சாரதி அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் காலாவதியாகின்ற குறித்த திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படுகின்றது.


மேற்படி கால எல்லைக்குள் உள்ளடங்காதவர்களுக்கான சேவைகள் பற்றிய விபரம் மற்றும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திர எழுத்துப் பரீட்சை, பிரயோகப் பரீட்சை என்பவற்றுக்கான திகதிகள் அரசின் புதிய சுகாதார வழி காட்டுதல்களுக்கு அமையவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிப்படுத்தலுக்கு அமையவும் அறிவிக்கப்படும்.


நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலமைகளைக் கருத்தில் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.