சமையல் எரிவாயு விலையினை 1,200 ரூபாவினால் அதிகரிக்கும் சாத்தியம்???

சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 1,200 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு முழுமையாக இடம் பெறாத பட்சத்தில் விலை இடை வித்தியாசத்தை திறை சேரியே பெறுப்பேற்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


லிட்ரோ நிறுவனத்தின் சேவையாளர்கள் அடங்கிய குறித்த ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.