சற்று முன்னர் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 4 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன..!

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் அமெரிக்காவின் அனுசரணையுடன் கோவக்ஸ் வசதியின் கீழ் இலங்கைக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது.

நான்கு இலட்சம் பைசர் ஊசி மருந்துகள் இன்று (01) இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து மாலத்தீவு வழியாக எமிரேட்ஸ் விமானம் ஈ.கே -652 இல் மாலை 06.30 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது.


சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலினா டெப் லிப்ஸ், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் டி.வி.சானகா ஆகியோரும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை நேற்றைய தினமும் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன.

இதேவேளை சினோபாம் தடுப்பூசியைப் பெறுவதில் வடபகுதி மக்களும், இளைஞர்களும் ஆர்வம் காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.